நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் மொனராகலை, புத்தளம், அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும். ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக சொத்துக்கள் சேதம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகள் ஏற்படுத்திய மோதல் காரணமாக, நீர்கொழும்பு...

காசா குழந்தைகளின் கல்விக்காக ஸ்வீடன் பில்லியனர் ரோஜர் அகெலியஸ் சுமார் $76 மில்லியன் நிதியுதவி.

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி குழந்தைகளின் கல்வித் தேவைகளை மறுசீரமைப்பதற்காக,...

டெங்கு பரவலால் கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் Online-இல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு பரவல் காரணமாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும்...