புதிய கல்விச் சபைக்கான பரிந்துரைகள் முன்மொழிவு: பொதுமக்களின் கருத்துகளுக்கு அழைப்பு!

Date:

இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,  பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பரிந்துரைக்கமைய ‘கல்விச் சபை’ ஒன்றினை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தக் கல்விச் சபையானது நான்கு பிரதான துறைகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளதுடன், சட்ட விவகாரங்கள், தர உறுதிப்படுத்தல், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் கல்விசார் நிபுணர்களுக்குச் சான்றளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்குழுவின் அறிக்கை தற்போது கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (https://moe.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, கல்விச் சபையை நிறுவுவதற்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் தலைவர் மஹிந்த ஜயசிங்கவின் ஆலோசனையின் பேரில், தற்போது பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமது கருத்துகளை 2026 மே 12 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகப் பின்வரும் தபால் முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கின்றது.

Popular

More like this
Related

அன்று ஹிஜாப் அணிந்த துருக்கி பெண் அமைச்சரை சிறைபிடித்து துரத்திய நெதர்லாந்து: 2017 அவமதிப்புக்கு 2026-ல் துருக்கி கொடுத்த தரமான பதிலடி

துருக்கி ஜனாதிபதி ரெசப் தயிப் அர்தூகானின் தீர்க்கமான இராஜதந்திரம் மற்றும் அவரது...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக சொத்துக்கள் சேதம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகள் ஏற்படுத்திய மோதல் காரணமாக, நீர்கொழும்பு...