ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதிகள்!

Date:

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் குறித்தும்,  அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இச்சந்திந்திப்பில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...