ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

Date:

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் காரணமாக, ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் வடக்கு ஜப்பானின் ஒரு பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

அதேபோல் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, ஜப்பானின் வடகோடியில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் உள்ள சிறிய நகரமான சரபெட்சுவில் இருந்து 18 கிலோமீட்டர் மேற்கே, 81 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் அளவை 6.1 ரிக்டர் எனப் பதிவு செய்துள்ளது. இதனிடையே வரும் வாரத்தில் அப்பகுதியில் இதேபோன்று மேலும் பல நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக உள்ளதாகவும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...