நண்பகலில் சூரியன் உச்சம்: சில பகுதிகளில் பிற்பகலில் இடியுடனான மழைக்கு சாத்தியம்

Date:

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று  மதியம் சுமார் 12.11 மணியளவில் பொம்பரிப்பு, அனுராதபுரம், மிகிந்தலை, ஹலன்பிந்துனுவெவ, அக்போபுர, மற்றும் சேருநுவர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, வதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா   மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி,  நுவரெலியா, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...