நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

Date:

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUI) ஒப்பீட்டு மதங்கள் துறையின் (Department of Comparative Religions) விரிவுரையாளரும் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமான  கலாநிதி அப்துல் மலிக் சுகவீனம் காரணமாக நேற்று (26) காலமானார்.

அவரது ஜனாஸா இஸ்லாமாபாத் இஸ்லாமியப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவரது ஜனாஸா நல்லடக்கத்தைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் கலாநிதி அகமது சாத் அல்-அஹ்மதி முன்னின்று நடத்தினார்.

பல்கலைக்கழகத்தின் உயர்மட்டத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு அன்னாரது மறைவிற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

கலாநிதி அப்துல் மலிக், இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார். அவரது கல்விப் பங்களிப்பு மற்றும் கண்ணியமான பண்புகளை நினைவு கூர்ந்த வேந்தர், அன்னாரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுக்குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து, மறைந்த அப்துல் மலிக் அவர்களின் மகனைச் சந்தித்துத் தங்களது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...