புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூல மாணவர்கள் சாதனை: உயர்தரப் பெறுபேறுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம்!

Date:

Dilshan Mohamed

சமீபத்தில் வெளியான உயர்தரப் (A/L) பெறுபேறுகளில் புத்தளம் மாவட்டத் தமிழ் மொழி மூல மாணவர்கள் படைத்துள்ள வரலாற்றுச் சாதனையை பாராட்டி, பிரபல சமூக ஆர்வலர் தில்ஷான் முகமது தனது முகப்புத்தகத்தில் (Facebook) நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில் தற்போது வெளியாகியிருக்கும் GCE (A/L) உயிரியல் மற்றும் பிரயோக விஞ்ஞான (Bio and Physical science) பிரிவு பெறுபேறுகளில் புத்தளம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை தமிழ் மொழி மூல மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளமை அவதானிக்க முடியுமாக இருக்கிறது.

பிரபல சிங்கள மொழி பாடசாலைகளின் ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்துவது இலகுவான காரியமல்ல.

ஏனெனில் ஒரு மாணவர் மருத்துவ பீடம் நுழைந்தாலே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட காலத்தை கடந்து வந்திருக்கிறோம்.

இந்த கட்டுடைப்புக்கு அடித்தளமிட்டது புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

இந்த கல்லூரியின் வருகையின் பின்னரே புத்தளம் விஞ்ஞான பிரிவுக்கான மைய புள்ளியாக (Hub) உருமாற்றம் பெற்றது.

தற்போதைய பெறுபேறுகளில் உயிரியல் மற்றும் பிரயோக விஞ்ஞான இருபிரிவுகளிலும் மாவட்டத்தின் முதலாம் இடத்தினை (Rank 1) ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரி பெற்றிருப்பது அதன் இலக்கினை நோக்கி பயணிக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றாகும்.

விஞ்ஞான பிரிவுக்கான பிரத்தியோக கல்லூரியை உருவாக்கிய மர்ஹூம் KA பாயிஸ் அவர்களின் எண்ணங்களை அல்லாஹ் பொறுந்திக்கொள்ளட்டும்.

இந்த இமாலய வெற்றியில் இணைந்துள்ள ஏனைய பாடசாலைகளின் விஞ்ஞான பிரிவு திட்டங்கள், புத்தளத்தின் தனியார் விஞ்ஞான நிலையங்கள், அனைத்து தரப்பிலும் கடுமையாக உழைத்த ஆசிரிய ஆசிரியைகளுக்கும், வெற்றியை பரிசாக தந்த மாணவ மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...