ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

Date:

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பாரசீக மொழியில் இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கான ஒரு புதிய இலக்கைக் குறிப்பதாக இருக்கலாம் என்று ஈரானால் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய கூட்டுத் தாக்குதல் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் அமெரிக்க அதிபர் விடுத்த காலக்கெடுவையும் ஈரான் நிராகரித்த நிலையில், ஈரானின் இரண்டு மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது.

இதன்காரணமாக ஈரானின் 85 சதவிகித பெட்ரோ கெமிக்கல் உற்பத்தியை அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் தனது எக்ஸ் தளத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில்,”உங்கள் இருப்பு உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் பல வாரங்களாக தன்னுடைய நாட்டில் இணையதள சேவையைத் துண்டித்துள்ளதால், இஸ்ரேல் இராணுவத்தின் எச்சரிக்கைகளை ஈரானிய மக்கள் பார்ப்பது கடினமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...