வக்ப் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: பிரதி அமைச்சர் முனீர் முளப்பரால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

Date:

27 ஆவது வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்ப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற இந்த விஷேட நிகழ்வின் போது, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மர்ஷாத் பாரி அவர்கள் உட்பட ஏழு பேரைக் கொண்ட வக்ப் சபை உறுப்பினர்கள் பிரதி அமைச்சரிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த நியமனமானது 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும்.

நியமனம் பெற்ற வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு,

1. எம்.மர்ஷட் பாரி (தலைவர்)
2. அஷ்-ஷைக் எம்.எஸ்.எம்.இஹ்ஸான் ரஷாதி
3. எம்.வை.ஏ.ரிபாக் அஹமட்
4. ஏ.எம்.ஜே.எம்.ஜவ்பர்
5. சட்டத்தரணி செய்னுல் மசூதீன்
6. எம்.ஏ.எம்.அரூஸ்

7. எம்.ஐ.அமினுடீன்

இந் நிகழ்வில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், முஸ்லிம் மத அமைப்புகளின் நிர்வாக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதும் புதிய சபையின் பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.

குறிப்பாக பள்ளிவாசல் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சட்டபூர்வமாகவும் நியாயமான முறையில் தீர்க்க புதிய தலைவர் மற்றும் குழுவினர் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முஸ்லிம் மத மற்றும் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...