விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கு மே 2 வரை விளக்கமறியல்.

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய குஷ் மற்றும் ஹஷிஷின் ஒரு பெரிய கையிருப்பை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளின் ஆதாரம், குறித்த நடவடிக்கைக்கு நிதியளித்தவர்கள் மற்றும் மற்றவர்கள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணைகள் தொடரவுள்ள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும்...

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...