அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய தினம் (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஏப்ரல் மாத கொடுப்பனவாக 3.087 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 72,525 சிரேஷ்ட பிரஜைகளுக்கு 362.6 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
