ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரல்

Date:

ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட அறிவிப்பை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் நீதி, உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும் என்பதே இந்த பிரார்த்தனை தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

அன்றைய தினம், நாட்டின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...