நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு காலத்தில் மக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தவின் (ஓய்வுபெற்ற) அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முப்படைகள், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பங்களிப்புடன் இந்த விசேட பாதுகாப்புப் பொறிமுறை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த கூட்டுத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவுள்ளன.
இதற்காக, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன், இது முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்புடன் கூட்டுச் செயற்பாட்டு மையமாகச் செயற்படுகின்றது.
இந்த விசேட செயற்பாட்டு மையத்தை பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொள்ள முடியும்:
தொலைபேசி எண்கள்: 011- 2013051 / 011- 2027148 011- 2027149 / 011- 2430912
மின்னஞ்சல் முகவரி: igp.opsroom@police.gov.lk
