தேசிய அடையாள அட்டை பெறுவோருக்கு அறிவிப்பு!

Date:

தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருநாள் சேவையானது, அத்தியாவசியத் தேவையுள்ளவர்களுக்காக மட்டும் இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சேவையானது திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என அதன் பதில் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பைச் சீர்செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரதான அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்வரிசைச் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கணினி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னர், அனைத்துச் சேவைகளும் வழமை போன்று தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...

அன்று ஹிஜாப் அணிந்த துருக்கி பெண் அமைச்சரை சிறைபிடித்து துரத்திய நெதர்லாந்து: 2017 அவமதிப்புக்கு 2026-ல் துருக்கி கொடுத்த தரமான பதிலடி

துருக்கி ஜனாதிபதி ரெசப் தயிப் அர்தூகானின் தீர்க்கமான இராஜதந்திரம் மற்றும் அவரது...