நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

Date:

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழைக்கு வாய்ப்புள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லி மீற்றர் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே நிலவும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொணராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பிலிருந்து காலி, அம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும்.

 

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...

மீண்டும் கொழும்பு வர விசேட போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதை முன்னிட்டு...

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...