நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

Date:

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்த புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட தரப்பினருக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு கூடிய மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மக்கள் கோசமிட்டனர். இதனையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்ப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார மீது மக்கள் முட்டை மற்றும் சாணத்தை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...