மக்காவில் உள்ள ராபிதாவின் அனுசரணையில் உயர்கல்வி கற்ற இரட்டை சகோதரிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள்

Date:

இம்ரான் ஜமால்தீன்
பணிப்பாளர்,
ராபிதாவுக்கான (MWL) இலங்கை பிரதிநிதி.

மக்காவில் உள்ள ராபிதாவின் (MWL) அனுசரணையில் உயர்கல்வி பயின்ற இரட்டையர் சகோதரிகள், இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

“இஸ்ரா இஸ்மாயில் மற்றும் இஸ்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, மருத்துவத்துறையில் பயிலும் வாய்ப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

இது அவர்களின் விடாமுயற்சி, ஒற்றுமை மற்றும் உறுதியான இலட்சியத்தின் விளைவாகும். சவால்களை மீறி உயர்ந்த நிலையை அடைந்துள்ள இவர்களின் சாதனை பலருக்கும் ஒரு ஊக்கமூட்டும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இரு மாணவிகளும் மருத்துவத்துறையில் மேலும் உயர்ந்து, மனிதகுலத்திற்குப் பயனுள்ள சேவைகளைச் செய்ய அல்லாஹ் அருள்புரியப் பிரார்த்திக்கின்றோம்.”

Popular

More like this
Related

மக்கா புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலின் முஅத்தின் ஷேக் இப்ராஹிம் அல்-மதனி காலமானார்!

மக்கா புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினான (தொழுகைக்கான அழைப்ப...

சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (21) 38...

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த...

சவூதியில் மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அனோஜனின் குடும்பத்தினரைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைத் தொழிலாளியான சிவராசா...