மீண்டும் கொழும்பு வர விசேட போக்குவரத்து சேவை

Date:

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய பயணிகளின் தேவை கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கமைய வெளி மாகாணங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் 20ஆம் திகதிக்கு பின்னரும் கொழும்பு வருவதை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை நெடுந்தூர சேவைகள் உட்பட சுமார் 7000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அலுவலக ரயில் சேவைகள் இன்று முதல் வழமை போன்று சேவையில் ஈடுபடுமென ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...