ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

Date:

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்க அவர்களின் அன்புத் தந்தை என்.ஏ. ஞானதாச அவர்கள் இன்று (24) காலை  தனது 87 ஆவது வயதில் அத்தனகல்ல, வெலிக்கடமுல்லவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இவர் ஒரு காலத்தில் ஒருவல எஃகு கூட்டுத்தாபனத்தில் (Steel Corporation) பணியாற்றியவர். பின்னர் விவசாயத் துறையில் ஈடுபட்டு, தனது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி, அவர்களை நாட்டிற்குப் பயனுள்ள பிரஜைகளாக உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரண்டு பிள்ளைகளின் சிறந்த தந்தையாவார்.

சிங்களம், தமிழ், ஆங்கிலம், பாளி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்ட கலாநிதி தம்மிக ஜயசிங்க, இலங்கையில் முதன்முறையாக சிங்கள மொழியில் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பிக்கும் திஹாரிய ‘தன்வீர் அகடமி’ (Tanveer Academy) ஆரம்பிக்கப்படுவதில் முக்கிய பங்காற்றியவர்.

மேலும், ‘பஹன’ வெளியீட்டகம் வெளியிட்ட ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ (‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’)  எனும் நூலை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்த்தவர் இவராவார். அத்துடன் இவர் ‘பஹன’ ஊடக நிருவாக சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்.

அன்னாரின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தனகல்ல பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.

கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு ‘பஹன’ ஊடகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...