வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

நிதி மற்றும் பொருளாதார அலுவல்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகப் பணியாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார்.

அவர் தேசிய திட்டமிடல், அரச நிதி முகாமைத்துவம், பேரண்டப் பொருளாதார முன்கணிப்பு, அபிவிருத்தி நிதியளிப்பு, நிதிப் பகுப்பாய்வு, வரிக் கொள்கை மற்றும் உயர்கல்வி திட்டமிடல் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவமிக்க அதிகாரியாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ...

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

நிலக்கரி இறக்குமதியும் ஊழல் புகார்களும்: சீமெந்துத் தொழிற்சாலை முதல் அனல்மின் நிலையம் வரை புத்தளத்தின் தொடர் போராட்டங்கள்.

மின்சாரம் - எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து  நமது...