107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

Date:

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற மூதாட்டி, தனது 107-ஆவது வயதில் கடந்த 13ஆம் திகதி காலமானார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இவ்வுலகில் வாழ்ந்த இவர், வாழும் காலம் வரை எந்தவித நோய் நொடிகளும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இம் மூதாட்டி ஐந்து தலைமுறைகளைக் கண்ட பெருமைக்குரியவர். 7 பிள்ளைகள், 17 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப் பேரப்பிள்ளைகள், 1 எள்ளுப் பேரனையும் கண்டுள்ளார்.

மிக நீண்ட காலம் நோய்நொடி இன்றி வாழ்ந்து மரணிப்பது என்பது மிகவும் அரிதான ஒரு செய்தியாகும். அந்த வகையில் இத்தாயின் மரணம் ஒரு முக்கியமான செய்தியாக அமைந்திருக்கிறது.

ஆரோக்கியமாக வாழும் வரை நீண்ட காலம் வாழலாம் என்பதற்கு இத்தாயின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எந்தவிதமான நோய்களுமின்றி அல்லாஹ்வின் அருளால் கடந்த வருடம் வரை ரமலான் நோன்புகளை நோற்று வந்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும்...

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...