6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

Date:

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து சேவைகள் மூலம், இலங்கை போக்குவரத்துச் சபை சாதனை அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது.

 

சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள் மூலம், கடந்த 6 நாட்களில் மாத்திரம் ஒரு பில்லியன் (1000 மில்லியன்) ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) அறிவித்துள்ளது.

 

இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றிலேயே ஒரே நாளில் ஈட்டப்பட்ட அதிகூடிய வருமானம் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி பதிவாகியுள்ளது.

அன்று ஒரு நாளில் மாத்திரம் 213 மில்லியன் ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாகச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார்.

இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன, பயணிகளின் நலன் கருதி மேலதிக பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தியதன் மூலமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்காக இன்றும் (15) விசேட பேருந்து சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...