A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

Date:

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (24) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2026 மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 விண்ணப்பங்கள் முற்றிலும் இணையவழியில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இறுதி நேரத்திற்குப் பிறகு எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

எனவே, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது விண்ணப்பங்களைக் இறுதி நேரத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் அல்லது விளக்கம் தேவைப்படும் பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் 011-2785922, 011-2784208, அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

விசாரணைகளை 011-2784422 என்ற தொலைநகல் எண்ணுக்கோ அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...