Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

Date:

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர், நேற்று  தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை, வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இவர் கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகாலை மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் மீட்கப்பட்ட போது வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது விளையாட்டின் ஏதேனும் சவால்களால் (Tasks) தூண்டப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், தயவுசெய்து உடனடி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உதவிக்கு அருகிலுள்ள சுகாதார நிலையங்கள் அல்லது உதவி இலக்கங்களை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...