சிரியாவை உலுக்கிய கொடூரம்: பல மாத இரகசிய வேட்டைக்குப் பின் முக்கிய சூத்திரதாரி அம்ஜத் யூசுப்பை கைது செய்தது சிரிய பாதுகாப்புப் படை.

Date:

சிரியாவில் 2013-ம் ஆண்டு நடந்த கொடூரமான (Tadamon Massacre) படுகொலை சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான அம்ஜத் யூசுப் (Amjad Youssef), பல மாத கால தீவிர கண்காணிப்புக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக சிரிய உள்நாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள்,

கடந்த சில மாதங்களாக அம்ஜத் யூசுப்பின் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் அவரைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஹமா (Hama) கிராமப்புறத்தில் உள்ள ‘நபால் தாயிப்’ (Naba Altayib) எனும் பகுதியில் அவர் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மூன்று பாதுகாப்பு வலயங்களைக் கொண்ட ஒரு துல்லியமான திட்டமிடலின் மூலம், அவர் கடுமையாக எதிர்த்தபோதிலும் பாதுகாப்புப் படையினர் அவரை மடக்கிப் பிடித்தனர்.

படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி, அவரது அடையாளம் உலகிற்குத் தெரிந்தவுடன் அம்ஜத் யூசுப் சிரியாவை விட்டு வெளியேறினார்.

பின்னர் மீண்டும் டமாஸ்கஸ் திரும்பிய அவர், தனது பழைய தொடர்புகளைப் பயன்படுத்திப் பல இடங்களுக்கு மாறி மாறிச் சென்று தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

Tadamon Massacre படுகொலை : ஒரு கறுப்புப் பக்கம்

2013-ஆம் ஆண்டு சிரியாவின் ததும்பான் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவானவர்கள் என்ற போர்வையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பொதுமக்கள் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

கைகள் கட்டப்பட்டு, கண்களில் துணி கட்டப்பட்ட நிலையில் மக்கள் ஓடச் சொல்லப்பட்டு பின்னால் இருந்து சுடப்பட்டனர்.பின்னர் சடலங்கள் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் வீசப்பட்டு எரிக்கப்பட்டன.

இந்தக் கொடூரம் குறித்த வீடியோ ஆதாரத்தை 2022 ஏப்ரலில் ‘தி கார்டியன்’ (The Guardian) இதழ் வெளியிட்ட பிறகே இந்த விவகாரம் உலகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணைகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தப் படுகொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்யத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அம்ஜத் யூசுப்பின் கைது நீதிக்கான பாதையில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...