நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறதா?: டிரம்ப் பரிசீலனை.

Date:

அமெரிக்கா நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

த டெலிகிராப் பத்திரிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி என்று சாடிய ட்ரம்ப், பிரித்தானியாவிடம் ஒரு கடற்படை கூட இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்குப் பிறகு, இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மீண்டும் பரிசீலிப்பீர்களா எனக் வினவிய நிலையில், ஆம், அது மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டது என்று தாம் கருதுவதாக கூறினார்.

நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு காகிதப்புலி என்பது எனக்கு எப்போதோ தெரியும், அது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் நன்கு தெரியும் என விமர்சித்துள்ளார்.

பிரித்தானியாவிடம் கடற்படை கூட இல்லை. நீங்கள் மிகவும் பழமையாகிவிட்டீர்கள், என கடுமையாக ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அந்த நீரிணையை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நாடுகளின் உதவியை கோரியிருந்தார்.

இந்நிலையில் அவரது அழைப்பு நேரடியாகவே நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், ட்ரம்ப் நேட்டோ நாடுகளை இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆரிகாமம் மஸ்ஜித் விவகாரம்: சமூக ஊடக வதந்திகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தெளிவறிக்கை!

கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...