பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

Date:

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சிரிய தலைநகர் டமாஸ்கஸிற்கு வருகை தந்தனர்.

அங்கு அவர்கள் சிரியத் தலைவர் அஹமது அல்-ஷாராவுடன் (Ahmed al-Sharaa) முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர்.

கடந்த வாரம் துருக்கி மற்றும் வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட ஷெலென்ஸ்கி , தற்போது சிரியாவிற்கு வந்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, தனது நாட்டின் பாதுகாப்பு உடன்படிக்கைகளை உறுதிப்படுத்த அவர் முயன்று வருகிறார்.

உக்ரைனின் நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை (Drone Expertise) வழங்கி, அதற்குப் பதிலாக வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் (Air Defence Missiles) பெற்றுக்கொள்வது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

டமாஸ்கஸ் வந்திறங்கிய பின் ஷெலென்ஸ்கி  தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

“முக்கியமான சந்திப்புகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு பிராந்தியமும் அமைதியான வாழ்க்கையைப் பெறத் தகுதியானவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டமாஸ்கஸ் விமான நிலையத்தில் உக்ரைன் அதிபர் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சரை சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் அல் ஷைபானி வரவேற்றார். இந்தப் பேச்சுவார்த்தையில் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஆரிகாமம் மஸ்ஜித் விவகாரம்: சமூக ஊடக வதந்திகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ தெளிவறிக்கை!

கடந்த 24.06.2026 முதல் சமூக ஊடகங்களில் ஆரிகாமம் மஸ்ஜித் தொடர்பாகப் பரப்பப்பட்டு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...