அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸுக்கு பயணம்!

Date:

பெலாரஸ் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் மெக்சிம் ரைசென்கோவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 மே 12 முதல் 15 வரையில் பெலாரஸுக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய நிலையில், இப்பயணம் இருதரப்புக் கூட்டாண்மையில் ஒரு மைல்கல்லாக அமையும்.

மின்ஸ்க் இற்கான பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவைச் சந்திக்கவுள்ளதுடன், பெலாரஸின் வெளிநாட்டு அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவார்.

அமைச்சர் ஹேரத், பெலாரஸின் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பெலாரஸ் குடியரசுடன் பல்வேறு துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்ஸ்கில், பெலாரஸின் தேசிய ஏற்றுமதி மையம் ஏற்பாடு செய்துள்ள வணிகம் மற்றும் சுற்றுலா வட்டமேசை மாநாட்டில் அமைச்சர் ஹேரத் உரையாற்றுவார். மேலும், பெலாரஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

-லத்தீப் பாரூக் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300...