உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

Date:

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது புதல்வி, Acute Myeloid Leukemia எனப்படும் தீவிர இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இச்சிறுமிக்கு, உயிர் பிழைக்க வேண்டுமானால் இன்னும் ஒரே வார காலத்திற்குள் இந்தியாவில் என்புமச்சை சத்திரசிகிச்சை (Bone Marrow Transplant) மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த அவசர சத்திரசிகிச்சை மற்றும் இதர மருத்துவச் செலவுகளுக்காக சுமார் 2 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தினால் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது பெரும் சவாலாக உள்ளது.

இளம் தளிரின் உயிரைக் காக்க தங்களால் இயன்ற நிதி உதவிகளைச் செய்யுமாறும், இச்சிறுமி பூரண குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வங்கி விபரங்கள்:
பெயர்: A.J.M. Hasumeyan
கணக்கு இலக்கம்: 89956496
வங்கி: இலங்கை வங்கி (BOC) –
ஹெம்மாதகம கிளை (Hemmathagama Branch)

உங்களின் ஒரு சிறிய பங்களிப்பு ஒரு பிஞ்சு உயிரின் வாழ்வை மீட்டெடுக்க உதவும். உங்களது சமூக வலைதளங்களில் இதனைப் பகிர்ந்து உதவிடுங்கள்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...