ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

Date:

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதையடுத்து ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது.

முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, தவெகவுக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக வெள்ளிக்கிழமை (மே 8) அறிவித்தது.

அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்தது. அதன்படி தவெகவுக்கு விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இன்று தெரிவித்துள்ளது. அந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தற்போது இணைந்துள்ளது.

ஐயுஎம்எல் சார்பில் 2 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஆதரவு கடிதம் செங்கோட்டையன் வசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தவெகவின் எம்எல்ஏக்களின் பலம் 120ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தவெகவுக்கு தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் விஜய் ஆட்சியமைப்பதில் நீடித்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.

 

Popular

More like this
Related

36-ஆவது நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகும் அங்காரா: உலகத் தலைவர்களை வரவேற்கிறது துருக்கி!

துருக்கி  தலைநகர் அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில்...

ட்ரோன்களைப் பயன்படுத்தி டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் டெங்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் நுளம்புகள்...

சிறுவர்களுக்கான சமூக ஊடக கட்டுப்பாடு தனிநபர் சட்டமூலம் நாடாளுமன்றில் முன்மொழிவு

இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை...

ஹிஜ்ரத் கற்றுத்தரும் பாடங்களை மீட்டிய ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்!

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி...