சைபர் குற்றச் செயல்கள் தொடர்பாக சுமார் 200 வெளிநாட்டவர்கள் கைது!

Date:

சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாள நாட்டவர்கள் உட்பட மொத்தம் 198 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, ஹிக்கடுவ மற்றும் மிடிகம பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணினி குற்றச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்ததாக சந்தேகத்தின் பேரில், காலியில் உள்ள கல்வடுகொட மற்றும் ஸ்ரீ சுமேத மாவத்த பகுதிகளில் உள்ள இரண்டு தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட 110 இந்தியக் குடிமக்களும் இதில் அடங்குவர்.

காலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தேக நபர்கள் 19 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது சந்தேக நபர்களிடமிருந்து 58 கணினிகள் மற்றும் 79 மொபைல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...