நாளை முதல் முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு!

Date:

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாத கொடுப்பனவுகள் நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற சுமார் 7 இலட்சம் முதியவர்களுக்காக 3,493,915,000.00 ரூபா நிதி அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 625,128 முதிய பயனாளிகளுக்காக 3,125,600,000.00 ரூபா

இரண்டாம் கட்டம் – 70 வயதுக்கு மேற்பட்ட 73,663 முதிய பயனாளிகளுக்காக 368,315,000.00 ரூபா

அனைத்து பயனாளிகளும் தமக்குரிய முதியோர் கொடுப்பனவை நாளை முதல் தமது அஸ்வெசும பயனாளிகள் வங்கிக் கணக்கின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தச் சபை மேலும் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...