பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும்.
அதன்படி, தமிழக வெற்றி கழகத்துக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகத்தை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் விஜய் வலியுறுத்தி உள்ளார்.
இதேவேளை, பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 14 நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.