ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்

Date:

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த வாழ்த்துச் செய்திக்குத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், “இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...