தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

Date:

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸில் பதிவில், மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்த மகத்தான வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது.
வரவிருக்கும் சவால்களை வென்று, மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்குவதற்கான வலிமையும் உறுதியும் கிடைக்க உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மேலும், இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் விடயங்களில் இலங்கையுடன் ஒரு வலுவான மற்றும் நேர்மறையான உறவு உருவாகும் என்றும் நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

 

Popular

More like this
Related

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...

லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன,...

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரான்   இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...