நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

Date:

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வரும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக, நாளைய (06) தினத்திற்கு பின்னர் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மத்திய, ஊவா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Popular

More like this
Related

‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய...

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...