நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு!

Date:

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (13) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...