வாகன இலக்கத் தகடுகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிப்பு!

Date:

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த அச்சிடப்பட்டும் உரிமை கோரப்படாமலும் உள்ள வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு வாகன உரிமையாளர்ளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு, நாரஹேன்பிட்டி தலைமைக் காரியாலயம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகளில் சுமார் 100,000 வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் குவிந்து கிடப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

 

2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட, ஆனால் விண்ணப்பதாரர்களால் இன்னும் பெறப்படாத தகடுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

 

கொழும்பு மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தில் தங்களது வாகனப் பதிவுத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதேசமயம், இதர மாவட்டங்களில் உள்ளவர்கள் மாவட்டச் செயலக அலுவலகங்களில் அமைந்துள்ள மோட்டார் ‍போக்குவரத்து திணைக்களத்தின் கிளைகளில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பான விசாரணைகள் அல்லது மேலதிக தகவல்களுக்கு, பொதுமக்கள் 011‑2033333 என்ற எண்ணின் மூலம் திணைக்களத்தின் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...

21 பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக்...

IMF இன் 5, 6 ஆம் மீளாய்வுகள் அடுத்த வாரத்தில்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில்,...