1967க்குப் பிறகு தமிழக வரலாற்றில் முதல்முறையாக அமைச்சரவையில் இணைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி: பதவியேற்றார் ஷாஜகான்.

Date:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் , விசிகவின் வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சருடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடியும். அதன்படி முதலமைச்சர் உள்பட 35 அமைச்சர்கள் பணியாற்றலாம்.

தற்போது மொத்தம் 33 அமைச்சர்களே பதவி ஏற்றிருப்பதால், கூடுதலாக 2 அமைச்சர்களை சேர்க்க வழிவகை உள்ளது. அந்த இடங்களில் தலா ஒரு இடம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் , விசிகவின் வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அவர்களுக்கு ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வன்னிஅரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ்  பழங்குடியினர் நலத்துறை  என்கிற சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைக்குப் பிறகு—குறிப்பாக 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு—தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் லீக் அமைச்சரவையில் பங்கு பெறுகிறது.

“முஸ்லிம்கள் இலவச வாக்கு வங்கி அல்ல, வாக்களிக்கும் இயந்திரமும் அல்ல, வாழ்வுரிமையைக் கேளுங்கள்” என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் சாத்தியமாகியுள்ளது.

கடந்த காலங்களில் திமுகவுக்கு சாசனம் எழுதிக் கொடுத்தது போல் கண்மூடித்தனமான விசுவாசத்தோடு இருந்த கோட்டை உடைக்கப்பட்டு, முஸ்லிம் லீக் தன் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

1967க்குப் பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் 2026இல் அமையப்பெற்றுள்ள தமிழகத்தின் முதல் கூட்டணி ஆட்சியில், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் பங்கு பெறுகிறது முஸ்லிம் லீக்.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...