இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி மீது 50 வீத மேலதிக வரியை விதிப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் அனுமதியுடன் வெளியான விசேட வர்த்தமானிக்கமைய இன்று முதல் இந்த மறுசீரமைப்பு அமுலுக்கு வருகிறது. இன்று முதல் 3 மாத காலத்திற்கு குறித்த மேலதிக வரி வசூலிக்கப்படும்.
எனினும் மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த வரி மறுசீரமைப்பு பொருந்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
