கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

Date:

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெறும் 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”உறுதியான ஆணை வழங்கிய கேரளத்திலுள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.

கடுமையாக போராடி, சிறப்பான பிரசாரத்தை மேற்கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்.

கேரளத்திடம் திறமையும், ஆற்றலும் இருக்கிறது. தற்போது இவ்விரண்டையும் பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைந்துள்ளது.

விரைவில் எனது கேரள குடும்பத்தினரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12இல் சமர்ப்பிப்பு!

2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்...

பாகிஸ்தான் உயர் ஆணையகத்தின் ஏற்பாட்டில் ISSI–SASSRI இடையே வரலாற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே ஆய்வு மற்றும் உத்திசார் (strategic) ஒத்துழைப்பை மேலும்...

ஞானசார தேரருக்கு எதிராக மீண்டும் பிடியாணை உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது...

முதல் முயற்சியிலேயே தேசிய உற்பத்தித்திறன் விருதை வென்று சாதனை படைத்தது Eastern Cancer Care Hospice.

தேசிய உற்பத்தித்திறன் விருது (National Productivity Award) போட்டியில் முதல்முறையாகப் பங்கேற்ற...