வெசாக் பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

Date:

2026 ஆம் ஆண்டு தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மதுபான சாலைகள், இறைச்சிக் கடைகள், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் இரவு விடுதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, மே 30, மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கால்நடை இறைச்சிக் கடைகளை மூடவும், பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்தி வைக்கவும், பந்தய மையங்கள், சூதாட்ட விடுதிகள், மதுபானக் கடைகள் மற்றும் இரவு விடுதிகளை மூடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டு அரச வெசாக் விழாவை முன்னிட்டு, மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...