ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

Date:

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ முனீர் முலப்பர் அவர்கள், இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்புரிச் சேவைகள் மற்றும் ஹஜ் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இன்று (மே 23) சவூதி அரேபியாவின் ஜெத்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, ஜெத்தாவிற்கான இலங்கைத் தூதர் நீதிபதி எம்.டி., பிரதி அமைச்சர் முகமது லஃபார் மற்றும் தூதரக அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து மிகவும் அன்போடும், உற்சாகத்தோடும் வரவேற்றனர்.

 ஹஜ் கடமைகளுக்காக, இலங்கையிலிருந்து செல்லும் 3,500 யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிகள், போக்குவரத்து, மருத்துவம் மற்றும் ஏனைய அத்தியாவசிய நலன்புரிச் சேவைகள் முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை  அதிகாரிகளுடன் இணைந்து பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் அவர்கள் நேரில் களமாய்வு செய்து, மிக நெருக்கமாகக் கண்காணிக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு: ஜனாதிபதி அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதி பொலிஸ் மா அதிபர்...