இஸ்லாத்தை அவமதித்த வழக்கு: ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

Date:

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியது.

தன்னை விடுதலை செய்யக் கோரியும், தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரியும் ஞானசார தேரர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தீர்ப்பினை வழங்கினார்.

 

இஸ்லாத்தை அவமதித்து, சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, ஞானசார தேரருக்கு எதிராகக் பொலிஸார் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது.

விசாரணைக்குப் பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி, அவருக்குத் ஒன்பது மாத தண்டனை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...