சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

Date:

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.

2023-ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பாக நேற்றைய (25) தினம் அபேசிங்கே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுக்குரிய இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, ​​அபேசிங்க தமது கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ  இருக்கவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ஊழல் அல்லது பிற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்துவதை ஆதரிக்கத் தயங்கமாட்டோம் என்றும், அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்க்கவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...