சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

Date:

க.பொ.த சாதாரண தர 2025(2026) பரீட்சை மீள் திருத்தம் செய்வதற்கு  எதிர்வரும் 08ஆம் திகதி வரை Online இல் விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், வேறு எந்த முறையூடாகவும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, “Our Services” என்பதன் கீழ் உள்ள “Exam Information Centre” என்பதை Click செய்வதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

இணையத்தள முறைமைக்குள் நுழையும் போது, ஏற்கனவே User Account உள்ளவர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்த வேண்டும். புதிய பயனர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன்னர், தொழில்நுட்ப அறிவுறுத்தல்கள், பொதுவான வழிகாட்டல்களைப் படிப்பதுடன், அதற்கான வழிகாட்டி வீடியோவையும்  பார்ப்பது துல்லியமாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு அத்தியாவசியமானது என பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற அவசர அழைப்பு இலக்கம் அல்லது 0112 785 231 உள்ளிட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...