நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

Date:

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த ‘சிவப்பு’  மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (12)  வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை, நாளை (13)  சனிக்கிழமை முற்பகல் 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரும் வரை இந்த கடற்பரப்புகளுக்குள்கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீட்டர் (kmph) வேகத்தில் வீசும் பலத்த காற்றினால் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் உள்ளது.

கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...