முஆய் தாய் உலகக் கிண்ணப் போட்டியில் தங்கம் வென்ற கஹட்டோவிட்ட இளம் வீரர்கள்!

Date:

மலேசியாவில் நடைபெற்ற IFMA Muay Thai School World Championship 2026 சர்வதேச முஆய் தாய் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி  சாதனை படைத்துள்ளது.

இப்போட்டித் தொடரில் இலங்கை வீராங்கனைகளும் வீரர்களும் 14 தங்கம், 7 வெள்ளி மற்றும் 25 வெண்கலப் பதக்கங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 46 பதக்கங்களைக் குவித்து தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இலங்கை அணியின் இந்த மாபெரும் வெற்றியில், கஹட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பாடசாலை மாணவர்கள் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளனர்.

சர்வதேச அரங்கில் தடம் பதித்த மொஹம்மத் ஸாதாத் மற்றும் மொஹம்மத் நுவைர் ஆகிய மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தித் தங்கப் பதக்கங்களைச் சொந்தமாக்கிக் கொண்டனர்.

அதேபோன்று, மற்றொரு இளம் வீரரான மிசாரி சிறப்பாகப் போராடி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

சர்வதேச அரங்கில் அர்ப்பணிப்புடன் போட்டியிட்டு, இலங்கை நாட்டிற்கும் தங்களது ஊருக்கும் உலகளாவிய பெருமையைத் தேடித்தந்துள்ள இந்த இளம் சாதனையாளர்களுக்கும், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருந்து வழிநடத்திய பயிற்றுவிப்பாளர்கள் (Coaches), முஆய் தாய் கழகத்தினர் மற்றும் அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய உறவினர்கள், நலன்புரி அமைப்புகள் அனைவருக்கும் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய...

ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையை மூடிமறைக்க முயன்றது எப்படி?: 30 ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதித் தேடல்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஜெனரல் ரட்கோ மிலாடிச் (Ratko Mladic) தலைமையிலான போஸ்னிய...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி...

‘ஹபீபி’ திரைப்படத்தின் வருகையும் கலாச்சார மைல்கல்லும்: தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவமும்

-ஃபாரிஸ் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி (கொழும்பு) சினிமா என்பது நம் காலத்தின் மிகச் சக்திவாய்ந்த...