அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

Date:

இன்றிரவு  முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும். மன்னார் வழியாக சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

மன்னார் வழியாக சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசக்கூடுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உட்பட இருவர் அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும்...

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...