காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

Date:

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் ( 03)புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பலானது பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சேவையானது இடை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த கப்பல் போக்குவரத்தானது எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகின்ற நிலையில், கப்பல் போக்குவரத்து வழமை போல் செவ்வாய் தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...